ADDED : ஜூலை 11, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலில் சிறுத்தை தாக்கியதில், நான்கு ஆடுகள் கொல்லப்பட்டன.
முல்பாகலின் குருடு மலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருடு மலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமப்பா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை, குருடுமலை அருகே உள்ள கவுடண்யா மலை பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். அவற்றில் நான்கு ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது.
இதையறிந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், மலையோர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளனர்.
