தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ் ஜன்னல்களில் கூடுதல் கம்பி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவு

 அரசு பஸ் ஜன்னல்களில் கூடுதல் கம்பி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவு

 அரசு பஸ் ஜன்னல்களில் கூடுதல் கம்பி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவு


ADDED : ஜூலை 11, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'அரசு பஸ்களில் ஏற்படும் விபத்துகளை தொடர்ந்து, அரசு பஸ் ஜன்னல்களில் கூடுதலாக இரும்பு கம்பிகளை பொருத்த வேண்டும்' என, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன், வட மேற்கு போக்குவரத்து கழகத்தின் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த நபர், குட்காவை புகைப்பதற்காக, ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டினார். அப்போது, எதிரே வந்த வந்த டிப்பர் லாரி மோதியதில், அவரின் தலை துண்டாகி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, போக்குவரத்து துறை செயலருக்கு, கர்நாடக மாநில போலீஸ் புகார்கள் ஆணைய உறுப்பினர் மோகன் குமார் தனப்பா, கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 'அனைத்து பஸ்களின் ஜன்னலிலும் குறைந்தபட்சம் மூன்று இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும். அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.

இதையடுத்து, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து துறை அனுப்பியுள்ள உத்தரவில், 'அனைத்து பஸ் ஜன்னல்களிலும் கூடுதலாக இரும்பு கம்பிகளை பொருத்த வேண்டும். சேதமடைந்த ஜன்னல் கம்பிகளை அகற்றி, புதிய கம்பிகள், உடைந்த கண்ணாடிகளை சரி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us