தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரில் 416வது ஆண்டு தசரா விழா நாளை துவக்கம்

மைசூரில் 416வது ஆண்டு தசரா விழா நாளை துவக்கம்

மைசூரில் 416வது ஆண்டு தசரா விழா நாளை துவக்கம்


UPDATED : அக் 10, 2026 04:34 AM

ADDED : அக் 10, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:34 AM ADDED : அக் 10, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நாளை தொடங்குகிறது. இது, 416வது ஆண்டு தசரா ஆகும். இதை முன்னிட்டு மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மைசூரு மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அரக்கனை, பார்வதி தேவி சாமுண்டீஸ்வரி அம்மனாக அவதாரம் எடுத்து வதம் செய்ததே விஜய தசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், விஜய தசமியை முன்னிட்டு, மைசூரில் 10 நாட்கள் நடக்கும் தசரா விழா, உலகப் புகழ்பெற்றது.

முதல்வர் தலைமை



விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் முதலாம் ராஜா உடையார் காலத்தில் இருந்தே, அதாவது, 1610ம் ஆண்டில் இருந்தே, மைசூரு தசரா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த, 1960ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிவுக்கு வந்த பின், 1970ல் இருந்து கர்நாடக அரசு சார்பில், மைசூரு தசரா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விஜயதசமியை ஒட்டி, நாளை முதல் 21ம் தேதி வரை 11 நாட்கள், மைசூரில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இது, 416வது ஆண்டு தசரா ஆகும்.

மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, காலை 11:50 மணி முதல், மதியம் 12:13 மணி வரையிலான தனுர் லக்னத்தில் பூஜை செய்வதன் மூலம், இந்த ஆண்டு தசராவை, கொப்பால் கவிமடத்தின் மடாதிபதி ஸ்ரீஅபினவ கவிசித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி வைக்கிறார்.

முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் தலைமையில் நடக்கும் தசரா துவக்க நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய கல்வி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இணையமைச்சர் ஷோபா, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

ஜொலிக்கும் நகரம்



தசராவை துவக்கி வைத்து மாநில மக்களுக்கு வாழ்த்து செய்தியை, மடாதிபதி ஸ்ரீஅபினவ கவிசித்தேஸ்வர மஹாசுவாமிகள் வழங்குகிறார். மாலை 5:00 மணிக்கு அரண்மனை வளாகததில் தசரா கலாசார நிகழ்ச்சி நடக்கிறது.

தசராவை கண்டுகளிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வர துவங்கி உள்ளனர். நகரம் முழுதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிப்பதால் மைசூரு நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21ம் தேதி, ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கஉள்ளது.

பாதுகாப்பு பணியில் 9,000 போலீசார்


மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ''மைசூரில் தசரா விழா நடக்கும் 11 நாட்களும், இரண்டு கட்டமாக 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நகரின் முக்கிய இடங்களில், 18 போலீஸ் உதவி மையங்கள் திறக்கப்படும். ஆம்புலன்ஸ்கள் தடையின்றி செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.
''பழமையான கட்டடங்கள், மரங்கள் மீது ஏற, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தசரா தொடர்பான புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அத்தகைய கணக்குகளை கண்காணிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகர் முழுதும் 35,794 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us