தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஒன்றரை டன் கல்லை இழுக்கும் போட்டி ராய்ச்சூரில் 44 ஜோடி காளைகள் பங்கேற்பு

ஒன்றரை டன் கல்லை இழுக்கும் போட்டி ராய்ச்சூரில் 44 ஜோடி காளைகள் பங்கேற்பு

ஒன்றரை டன் கல்லை இழுக்கும் போட்டி ராய்ச்சூரில் 44 ஜோடி காளைகள் பங்கேற்பு


UPDATED : நவ 13, 2026 03:53 AM

ADDED : நவ 12, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 03:53 AM ADDED : நவ 12, 2026 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: தீபாவளியை ஒட்டி நடந்த ஒன்றரை டன் கல்லை இழுக்கும் போட்டியில், கர்நாடக மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும், 44 ஜோடி காளைகள் பங்கேற்றன.

தீபாவளியை ஒட்டி, ராய்ச்சூர் மாவட்டம் சந்திரபண்டா கிராமத்தில் மூன்று நாள் கல் இழுக்கும் போட்டி நடக்கும். முதல் நாளான நேற்று போட்டியில் பங்கேற்க பல்வேறு கிராமங்களில் இருந்து 19 ஜோடி காளைகள் வந்திருந்தன.

இரண்டாம் நாள், இரண்டரை டன் எடையுள்ள கல்லை இழுக்க, தெலங்கானா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் வந்திருந்தன.

இறுதி நாளில் வெற்றி வெற்றி பெறும் காளைகளுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரசாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இது தவிர, 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம், 8 ஆயிரம் ரூபாய் உட்பட பல கவர்ச்சிகரமான ரொக்க பரிசுகளும் வழங்கப்படும்.

காளைகளுடன் ஒன்றரை டன் கல்லை கயிற்றால் கட்டிவிடுவர். போட்டி துவங்கியதும் காளையை விரட்டுவர். எந்த காளைகள் நீண்ட துாரம் சென்று நிற்கிறதோ, அதுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

இப்போட்டி, காளைகளின் வலிமை, விவசாயிகளின் வீரம், கிராமப்புற பாரம்பரியம், பெருமைக்கும் சான்றாக விளங்குகிறது.

இப்போட்டியை காண பல்வேறு கிராமங்களில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்து கொண்டு ரசித்தனர். இவர்களுக்கான உணவு, பானம் வழங்க சந்திரபண்டா கிராம மக்களே ஏற்பாடு செய்திருந்தனர்.

விவசாய சங்க தலைவர் கப்பூர் புதைய சுவாமி கூறுகையில், ''மூன்று நாள் போட்டிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

''கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் காளைகளுடன் இதில் பங்கேற்பர். விவசாயிகள் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கிரா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us