போலி ஆவணங்கள் உருவாக்கி ரூ.45 கோடி நிலம் அபகரிப்பு
போலி ஆவணங்கள் உருவாக்கி ரூ.45 கோடி நிலம் அபகரிப்பு
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 07:46 PM
சிக்கபல்லாபூர்: விவசாயிகளுக்கு சொந்தமான 45 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு போலியான ஆவணங்கள் உருவாக்கி, கிராம உதவியாளரின் பெயரில் பட்டா பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின் புலவாரபள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் லட்சுமய்யா, அஞ்சனப்பா, அக்காயம்மா, வெங்கடரெட்டிக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு 45 கோடி ரூபாய்.
இந்த நிலத்துக்கு, போலியான ஆவணங்கள் தயாரித்து, பாகேபள்ளி தாலுகா அலுவலகத்தின் கிராம உதவியாளராக பணியாற்றும் சிவம்மா என்பவரின் பெயரில் பட்டா அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கர்நாடக தொழிற் பகுதி மேம்பாட்டு ஆணையம் மூலமாக கையகப்படுத்தி, நிவாரணம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை அபகரிக்க, முயற்சி நடப்பதாக கூறப்படுகிறநு.
இதையறிந்த மாவட்ட கலெக்டர், விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை குழுவினர் அளித்த இடைக்கால அறிக்கையில், ‘மோசடி நடந்திருப்பது உண்மை தான்’ என கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தாசில்தா மனிஷா பத்ரிக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
