தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுதந்திர பூங்காவில் 4வது கழிப்பறை ஜி.பி.ஏ., அதிகாரிகளால் சர்ச்சை

சுதந்திர பூங்காவில் 4வது கழிப்பறை ஜி.பி.ஏ., அதிகாரிகளால் சர்ச்சை

சுதந்திர பூங்காவில் 4வது கழிப்பறை ஜி.பி.ஏ., அதிகாரிகளால் சர்ச்சை


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சுதந்திர பூங்காவில் ஏற்கனவே, மூன்று கழிப்பறைகள் இருந்தும், இவற்றை சரியாக நிர்வகிக்காத ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், நான்காவது கழிப்பறை கட்டுவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் சுதந்திர பூங்கா, போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட, பலரும் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துகின்றனர். இப்பூங்காவில் ஏற்கனவே மூன்று கழிப்பறைகள் உள்ளன.

சிறை இருந்த இடத்தில், ஒரு கழிப்பறை, அதன் எதிரில் மற்றொரு கழிப்பறை என உள்ளன. மூன்றாவது கழிப்பறை, ஒரு லட்சம் ரூபாய் வாடகையில், ரைட் பார்க் கட்டடத்தில் உள்ளது.

மூன்றில் இரண்டு கழிப்பறைகள், சரியான நிர்வகிப்பு இல்லாமல், பாழடைந்து கிடக்கின்றன. இந்நிலையில் கூடுதலாக நான்காவது கழிப்பறை கட்ட, ஜி.பி.ஏ., முற்பட்டுள்ளது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிடுவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்டக்காரர்களை நினைவூட்டும், மகத்துவம் பெற்ற சுதந்திர பூங்கா முழுதும் கழிப்பறைகள் கட்டுவதால், பூங்காவின் அழகு பாதிக்கப்படுவதாக, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை, சரியாக நிர்வகித்தாலே போதும்; கூடுதல் கழிப்பறை கட்டி பணத்தை வீணாக்க வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல், கழிப்பறை கட்டும் பணிகளை ஜி.பி.ஏ., துவக்கியுள்ளது.

இதுகுறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

சுதந்திர பூங்காவில் மூன்று முதல், 4,000 பேர் காலவரையற்ற போராட்டம் நடத்தும் போது, பூங்காவில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

போராட்டம் முடிந்து அவர்கள் சென்ற பின், பூங்காவை சுத்தம் செய்வது எங்கள் ஊழியர்களுக்கு, பெரும் பாடாக உள்ளது. இதை தவிர்க்கும் நோக்கில், மற்றொரு கழிப்பறை கட்டப்படுகிறது.

அது மட்டுமல்ல. போராட்டக்காரர்களுக்கு கழிப்பறை கட்டும்படி, போலீஸ் துறையும் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி கழிப்பறை கட்டப்படுகிறது.

ஒரு லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயித்துள்ள கட்டடத்தில் உள்ள கழிப்பறையை, போராட்டக்காரர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏன் என்றால் அங்கு நிகழ்ச்சி நடத்துவோர் மட்டுமே, கழிப்பறையை பயன்படுத்த அனுமதி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us