தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மல்லந்துார் ‘சன் செட் பாயின்ட்’

மல்லந்துார் ‘சன் செட் பாயின்ட்’

மல்லந்துார் ‘சன் செட் பாயின்ட்’


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: கர்நாடகாவின் மலை நாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனாலும் சீத்தாலயங்கிரி, முல்லையங்கிரி மலைகளுக்கும், மூடிகெரேயில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் தான் சுற்றுலா பயணியர் அதிகம் செல்கின்றனர். சிக்கமகளூரு சுற்றுலா செல்வோர் வாய்ப்பு கிடைத்தால் மல்லந்துார் ‘சன் செட் பாயின்ட்’ பகுதிக்கும் ஒரு முறை சென்று வரலாமே.

சிக்கமகளூரு டவுனில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள ஆல்துாருக்கு அருகே மல்லந்துார் என்ற கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வரும் இந்த கிராமத்தில் உள்ள மலைக்குன்றின் உச்சியில், ‘சன் செட் பாயின்ட்’ உள்ளது. கோல்ப் மைதானம் போல பரந்த புல்வெளிகளுடன் காணப்படும் இந்த இடம் சுற்றிலும் காபி தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

மலைக்குன்றின் உச்சியில் நின்று சுற்றிலும் பசுமை போர்த்திய பாறைகள், மரம், செடி, கொடிகளை கண்டு ரசிக்கலாம். பறவைகளின் ‘கீச்…கீச்’ சத்தத்தையும் கேட்கலாம். இது, மனதிற்கு அமைதியை தரும். பாறைகளுக்கு நடுவில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும் சிறந்த இடமாக உள்ளது.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் இங்கு அரை மணி நேரத்திற்கு மேல் வெளிச்சம் இருக்கும். இயற்கை அழகு காரணமாக, இங்கு திரைப்பட படப்பிடிப்புகளும் நடக்கின்றன.

அதிகம் அறியப்படாத இடமாக இருப்பதால் இங்கு கடைகளோ, உணவகங்களோ கிடையாது. தண்ணீர், தின்பண்டங்கள், உணவு வாங்கிச் செல்வது நல்லது.

காரில் செல்வோர் தங்கள் வாகனங்களை, முக்கிய சாலையில் நிறுத்தி விட்டு காபி தோட்டங்களுக்குச் செல்லும் சிறிய மலைப் பாதை வழியாக தான் நடந்து செல்ல வேண்டும். இது புதிய அனுபவத்தைத் தரும்.

இந்த இடத்தில் இருந்து 16 கி.மீ., துாரத்தில் ஹிரேகொலலே ஏரி உள்ளது. அது புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெங்களூரில் இருந்து சிக்கமகளூரு 245 கி.மீ., இங்கிருந்து மல்லந்துார் 22 கி.மீ., துாரத்தில் உள்ளது

 மெஜஸ்டிக்கில் இருந்து சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதி உள்ளது

 ரயிலில் சென்றாலும் சிக்கமகளூரு அல்லது பீரூர் ரயில் நிலையங்களில் இறங்கி கொள்ளலாம்

 ரயில் நிலையம் அல்லது பஸ் நிலையத்தில் இருந்து வாடகை கார்களின் வாயிலாகவும் செல்லலாம்.

எப்படி செல்வது?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us