65 தனியார் பஸ்களுக்கு ‘நோட்டீஸ்’ ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை
65 தனியார் பஸ்களுக்கு ‘நோட்டீஸ்’ ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 06:54 PM
பெங்களூரு: வெளி மாநில பதிவு எண்ணைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்த, 65 சொகுசு பஸ்களுக்கு, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
வெளி மாநிலங்களின் பதிவு எண்களை பயன்படுத்தி, கர்நாடகாவில் தனியார் பஸ்களை இயக்குவதால், போக்குவரத்து துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி மற்றும் எலஹங்கா ஆர்.டி.ஓ.., அதிகாரிகள், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின், டோல் பிளாசா அருகில், நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்தில் இருந்து, பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த ‘ஏசி’ ஸ்லீப்பர் பஸ்கள் உட்பட, பல வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தினர்.
அப்போது வெளி மாநிலங்களில், பதிவு செய்து, நிர்ணயித்த அளவை விட, கூடுதல் பயணியரை ஏற்றி வந்ததும், லக்கேஜ்களுக்கு சரியாக வரி செலுத்தாததும் தெரிந்தது.
விதிகளை மீறிய, 65 தனியார் பஸ்களுக்கு, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
