தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குடகின் நிசர்கதமா மான் பூங்கா

குடகின் நிசர்கதமா மான் பூங்கா

குடகின் நிசர்கதமா மான் பூங்கா


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: குடகு மாவட்டம், குஷால்நகர் அருகே நிசர்கதமா மான் பூங்கா உள்ளது. இது, கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 64 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பூங்காவில், மான்களை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மான்களுக்கு எக்காரணம் கொண்டும் உணவு வழங்கக்கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

இதை தவிர பேய் வீடு, பறவைகள் பூங்கா உள்ளிட்டவையும் இருக்கின்றன. பறவைகள் பூங்காவில் ஏராளமான வெளிநாட்டு பறவைகளைப் பார்த்து ரசிக்கலாம்.

பறவைகளுக்கு உணவு வழங்க அனுமதி உண்டு. இதற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பறவைகள் பூங்காவுக்குச் செல்ல ஒரு நபருக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தனியே பூங்கா உள்ளது. மேலும், காவிரி நதியை அருகில் சென்று பார்க்கலாம். இங்கு தொங்கும் பாலம் உள்ளது. இதில், நடக்கும் போது, கீழே காவிரி நதியின் அழகை ரசிக்க முடியும்.

இந்த பூங்காவுக்குள் நுழைவதற்கு ஒரு நபருக்கு 80 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த பூங்காவை ஒரு அழகிய தீவு என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. கழிப்பறை, குடிநீர் வசதி உண்டு. பூங்காவின் வெளிப்புறத்தில் ஏராளமான கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் சாக்லேட், ஆடைகள், ஒயின், உணவு வகைகள் கிடைக்கின்றன. இங்கு நேரத்தை அழகாக செலவிடலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்ற இடமாக இருக்கும்.

பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம் நேரடியாக குஷால்நகரை அடையலாம். அங்கிருந்து ஆட்டோ மூலம் 3 கி.மீ., தொலைவில் உள்ள பூங்காவை அடையலாம்.

இந்த இடத்திற்கு, பெங்களூரிலிருந்து ரயிலில் செல்வது நேரத்தை விரயமாக்கும். மேலும், பணம் அதிகளவு செலவாகும். எனவே, பஸ்சில் செல்வதே உகந்தது.

எப்படி செல்வது?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us