சக்கர நாற்காலியில் குப்பை எடுத்து சென்றவருக்கு கண்டனம்
சக்கர நாற்காலியில் குப்பை எடுத்து சென்றவருக்கு கண்டனம்
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 06:54 PM

நெலமங்களா: பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர், சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டிக்கிடந்தது. மருத்துவமனை ஊழியர் நேற்று காலை, இந்த செடி, கொடிகளை வெட்டினார்.
அந்த மரக்கழிவுகளை கூடையோ, பக்கெட்டோ பயன்படுத்தாமல், நோயாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தும் சக்கர நாற்காலியில் நிரப்பி, குப்பை தொட்டியில் போட வெளியே தள்ளிச் சென்றார்.
இதை பார்த்த சிலர், தங்கள் மொபைல் போனில், வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதைப் பார்த்த பலரும் மருத்துவமனை ஊழியரின் செயலைக் கண்டித்தனர்.
‘அரசு மருத்துவமனைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
அவசர நேரத்தில் அவர்களை அழைத்துச் செல்லப் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை, மருத்ததுவமனை ஊழியர், குப்பை எடுத்து செல்ல பயன்படுத்தியது சரியல்ல.
இத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மக்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
