தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சினிமா டிக்கெட்டுக்கு 2 சதவீத கூடுதல் வரி விதிப்பு உயர் நீதிமன்றம் ‘நோட்டீஸ ் ’

சினிமா டிக்கெட்டுக்கு 2 சதவீத கூடுதல் வரி விதிப்பு உயர் நீதிமன்றம் ‘நோட்டீஸ ் ’

சினிமா டிக்கெட்டுக்கு 2 சதவீத கூடுதல் வரி விதிப்பு உயர் நீதிமன்றம் ‘நோட்டீஸ ் ’


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சினிமா டிக்கெட்டுக்கு, 2 சதவீத செஸ் வரி விதிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கன்னட திரைத்துறை மற்றும் கலைத்துறையில் உள்ள தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு, நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில், சினிமா டிக்கெட்டுக்கு 2 சதவீத செஸ் வரியை அறிமுகப்படுத்தும், கர்நாடக சினிமா மற்றும் கலாசார ஆர்வலர்கள் சட்ட மசோதாவை அரசு கொண்டு வந்தது.

இதற்கு, மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே, சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி., வரி விதி க்கப்படும் நிலையில், செஸ் வரியும் கொண்டு வந்தால், வரிக்கு மேல் வரி விதிப்பது போல ஆகும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், செஸ் வரியை அமல்படுத்தாத தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதையடுத்து, செஸ் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இம்மனுவை நீதிபதி நரேந்திர பிரசாத் விசாரிக்கிறார்.

மனு மீது நேற்று நடந்த விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின், விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us