/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனித்தனி விபத்துகளில் ௸5 பேர் பரிதாப பலி
/
தனித்தனி விபத்துகளில் ௸5 பேர் பரிதாப பலி
ADDED : மே 13, 2025 12:25 AM
பெங்களூரு : இரண்டு தனித்தனி இடங்களில் நேர்ந்த சாலை விபத்துகளில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகாவின், சிக்கஹுல்லுார் அருகில், நேற்று அதிகாலை பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த டெம்போ வேன், மோதியது. பைக்கில் பயணம் செய்த ரிஷிகேஷ் முன்டா, 30, பக்த பன்டு, 22, ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இவர்கள் மூவரும் ஹொஸ்கோட்டில் உள்ள பிகோஸ் பேக் நிறுவனத்தில் பணியாற்றினர். பணி நிமித்தமாக ஒரே பைக்கில் சென்றபோது, விபத்து நேர்ந்தது. ஹொஸ்கோட் போலீசார் விசாரிக்கின்றனர்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹொளல்கெரே தாலுகாவின், கனிவே ஆஞ்சனேயா கோவில் அருகே, நேற்று அதிகாலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
காரில் பயணம் செய்த சுனிதா, 34, ஷியாம், 29, சிவு, 35, ஆகியோர் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த இவர்கள், சித்ரதுர்காவில் இருந்து, ஹொளல்கெரேவுக்கு சென்றபோது, விபத்தில் சிக்கினர்.
இதுகுறித்து, ஹொளல்கெரே போலீசார் விசாரிக்கின்றனர்.