ADDED : ஆக 02, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலக்ட்ரானிக் சிட்டி: பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரிடம் இருந்து, மொபைல் போன் திருடிய, ஆந்திராவின் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பி.எம்.டி.சி., பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணியரிடம் மொபைல் போன் திருடுவதாக பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவின் நாகனுரி குமார், 30, சாகர், 32, சிவகுமார், 30, குட்டு சாப், 36, ஹாலப்பா, 29, சிவசங்கர், 20, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 70 மொபைல் போன்கள், ஒரு கார், ஒரு பைக் மீட்கப்பட்டன. இதன்மதிப்பு 25 லட்சம் ரூபாய்.

