தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் அதிரடி கைது

பெங்களூரில் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் அதிரடி கைது

பெங்களூரில் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் அதிரடி கைது


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஊரை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டும், பெங்களூரிலேயே பதுங்கியிருந்த ஆறு ரவுடிகளை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெங்களூரின் பசவேஸ்வர நகர் போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்த உமேஷ் என்ற லுாசு, கங்கம்மன குடி போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இருந்த மதுசூதன் என்ற மது, வில்சன்கார்டன் போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்த முகமது ஆஜம் என்ற ஆஜம்.

டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்த மோஹின், சுத்தகுன்டே பாளையா போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்த ரவுடி சிவகுமார் என்ற சுவ்வி, மடிவாளா போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இருந்த அக்ஷய் ஆகியோர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர்.

இவர்களை பெங்களூரு எல்லையில் இருந்து வெளியேறும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவர்கள் ஆறு பேரும், பெங்களூரை விட்டு வெளியேறாமல், இங்கேயே ரகசியமாக பதுங்கியிருந்தனர்; குற்றங்களிலும் ஈடுபட்டனர். எனவே அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், ஆறு ரவுடிகளையும் நேற்று கைது செய்து, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us