ADDED : செப் 05, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
நெலமங்களா: காரில் கடத்தி வந்த, 600 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் நெலமங்களா தாலுகா ஜாஜூர் கிராமத்தில், தாபஸ்பேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்திய போது, காரின் இருக்கைக்கு அடியில் இருந்த சாக்கு மூட்டையில் இருந்து, 600 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன.
காரை ஓட்டி வந்த சிவசங்கர் என்ற ஆட்டோ சங்கர், 38 என்பவரை கைது செய்து விசாரித்த போது, கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க விற்பனை செய்வதற்காக ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டார். ஆனால் எங்கிருந்து கொண்டு வந்தது என்பதை கூற மறுத்துவிட்டார்.
