தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குவாரியில் 7 பேர் பலி: உரிமையாளர் கைது 

 குவாரியில் 7 பேர் பலி: உரிமையாளர் கைது 

 குவாரியில் 7 பேர் பலி: உரிமையாளர் கைது 


ADDED : ஜூலை 03, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து ஏழு பேர் இறந்த வழக்கில், கல்குவாரி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு மாகடி சாலை மாதப்பட்டணா கிராமத்தில், நேற்று முன்தினம் கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில், கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டம் சஹாபுரா தாலுகா நாடியால் கிராமத்தின் ராமு நாயக், 46, பீகார் மாநிலத்தின் புவனேஸ்வர் சிங், 37, தர்மேஷ் சிங், 28, ராஜேஷ் பிரசாத், 28, ராம் அவதார் சிங், 30, சத்யநாராயண கவுண்டி, 32, மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சிங், 22, ஆகிய ஏழு தொழிலாளர்கள் இறந்தனர்.

இதுதொடர்பாக, இரு கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பசவேஸ்வரா கிரஷர் என்ற கல் குவாரியின் உரிமையாளரான பாண்டுரங்கா, பொறுப்பாளர்கள் லோகேஷ், ராஜு ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடு கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us