/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டி.ஜே.ஹள்ளி - கே.ஜி.ஹள்ளி கலவரம் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
/
டி.ஜே.ஹள்ளி - கே.ஜி.ஹள்ளி கலவரம் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
டி.ஜே.ஹள்ளி - கே.ஜி.ஹள்ளி கலவரம் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
டி.ஜே.ஹள்ளி - கே.ஜி.ஹள்ளி கலவரம் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜூலை 24, 2025 06:52 AM
பெங்களூரு : பெங்களூரு கே.ஜி., ஹள்ளி - டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையங்களின் எல்லைக்குள் நடந்த கலவரம் தொடர்பாக, மூன்று பேருக்கு, என்.ஐ.ஏ., நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியின் அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர், சமூக வலைதளத்தில் தவறான கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, 2020 ஆக., 11ல், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிட்டு, வீட்டிற்கு தீ வைத்தனர். கலவரம் வெடித்தது. இதை தடுக்க டி.ஜே.ஹள்ளி - கே.ஜே.ஹள்ளி போலீசார் முயற்சித்தனர்.
ஆனால் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கருதிய கலவரக்காரர்கள், இரு போலீஸ் நிலையங்களுக்கும் தீ வைத்தனர்.
போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில் மூவர் உயிரிழந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், 2021ல் 115 பேருக்கு ஜாமின் கிடைத்தது.
இவ்வழக்கை, சி.சி.பி., போலீசார் விசாரித்து வந்தனர். பின், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கும், என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
'தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த, 15 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக சையது இக்ரமுத்தின் எனும் நவீத், 16வது குற்றவாளியாக சையது ஆசிப், 18வது குற்றவாளியாக முகமது அடிப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் கலவரத்தை துாண்டியதாகவும், போலீஸ் நிலையங்களை தீ வைத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இம்மூவருக்கும் நேற்று 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 46,000 ரூபாய் அபராதமும் விதித்து என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.