/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'3டி பிரின்டிங்'கில் கலக்கும் 7ம் வகுப்பு மாணவி
/
'3டி பிரின்டிங்'கில் கலக்கும் 7ம் வகுப்பு மாணவி
ADDED : நவ 16, 2025 11:23 PM

- நமது நிருபர் -: தார்வாட் மாவட்டம், மலாமடி பகுதியில் வசிப்பவர் நிதி குல்கர்னி, 13. இவர் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தன் சிறுவயதில் இருந்தே ஓவியம், பிரின்டிங் போன்றவையில் அதீத ஆர்வம் இருந்தது.
இதன் காரணமாக, '3டி' பிரின்டிங் தொழில்நுட்பத்தில் இறங்க திட்டமிட்டார். இதற்காக, தனது பெற்றோர் விநாயக் - அஞ்சலியிடம் பணம் கேட்டு உள்ளார். அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். 'உன்னால் எப்படி பிரின்டிங் செய்ய முடியும்.
ஆச்சரியம் உனக்கு எந்த முன் அனுபவமும் கிடையாதே' என திட்டி உள்ளனர். இதற்கு சிறுமியோ, 'யு - டியூப் பார்த்து 3டி பிரின்டிங் இயந்திரத்தை இயக்குவது குறித்து கற்றுக் கொண்டேன்' என்றார்.
இதை கேட்டு ஆச்சரியமடைந்த பெற்றோர், தங்கள் மகளின் ஆசைக்கேற்ப 18,000 ரூபாய்க்கு '3டி' பிரின்டிங் இயந்திரத்தை வாங்கி கொடுத்தனர். முதலில் அதை பயன்படுத்துவதில் தடுமாறிய நிதி, யு டியூப் வீடியோக்களை மீண்டும் பார்த்து இயந்திரத்தை பயன்படுத்த கற்றுக்கொண்டார். இது போன்று 3டி இயந்திரத்தை பயன்படுத்த தெரிந்த நபரை, வீட்டிற்கே அழைத்து வந்து, நிதிக்கு அவரது பெற்றோர் பயிற்சி அளித்தனர்.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட நிதி, பயிற்சிகளில் ஈடுபட்டார். இதையடுத்து, தனியாகவே 3டி பிரின்டிங் இயந்திரத்தை பயன்படுத்த துவங்கினார். தன் வீட்டிலேயே வைத்து 3டி மின்விளக்குகள், கண்ணாடியில் மனித முகங்களை தத்ரூபமான வகையில் பிரின்டிங் செய்தார்.
ஆனந்த கண்ணீர் இதை பார்த்த அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதையறிந்த பள்ளி நிர்வாகமும் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் நிதியை பாராட்டினர். இந்த ௩டி பிரின்டிங் மூலம், பணம் சம்பாதிக்கும் பணியை நிதி துவங்கினார்.
கடந்த நான்கு மாதங்களாக தொழிலாகவே செய்து வருகிறார்.
பிறந்தநாள், திருமணம் போன்றவற்றுக்கு தங்கள் முகங்கள் பிரின்டிங் செய்யப்பட்ட மின்விளக்கு, கண்ணாடிகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதன் மூலம் சிறுவயதிலே மாதந்தோறும் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறார்.
மொபைல் போன் மூலம் நல்ல விஷயங்களை கற்று கொள்ள முடியும் என்பதற்கு நிதி ஒரு எடுத்துக்காட்டு.

