தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/8 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்

8 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்

8 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 07:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாசன்: ‘‘ஹாசனாம்பாவை தரிசிக்க, நான்காவது நாளான இன்றும் (நேற்று), பெருமளவில் பக்தர்கள் வந்துள்ளனர்,’’ என அமைச்சர் சிவலிங்கே கவுடா தெரிவித்தார்.

ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த நான்கு நாட்களாக, ஹாசனாம்பாவை தரிசிக்க, பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். நவம்பர் 11ம் தேதி வரை மட்டுமே, ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதால் கர்நடகாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

கோவில் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஹாசனாம்பாவை தரிசனம் செய்துள்ளனர். இன்றும் (நேற்று) கூட, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

இதனால் கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாத விற்பனையால், 6.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, நவம்பர் 6ம் தேதியன்று, ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய வருகின்றனர். முக்கிய புள்ளிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும். அதன்படியே வருகின்றனர். நைவேத்தியம் செய்யும் நேரத்தை குறைத்து, பக்தர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us