தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு: 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

 குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு: 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

 குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு: 80 பேர் மருத்துவமனையில் அனுமதி


ADDED : ஜூலை 05, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: அசுத்தமான நீரை குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்கபல்லாபூர் மாவட்டம் சித்லகட்டா தாலுகாவின் சிக்கத்தேகஹள்ளி கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது.

இதையறியாமல், அந்த நீரை குடித்த இக்கிராமத்தை சேர்ந்த சிலருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டனர்.

உடனடியாக அருகிலுள்ள சத்யநாராயணராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேரத்தில் மேலும் சில மருத்துவமனைகளில் இதே கிராமத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபோன்று இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளும், கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால், அவைகளும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளன. அவைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

'இந்த சம்பவத்துக்கு கிராம பஞ்சாயத்தின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி வஜ்ரேஷின் பொறுப்பற்ற தன்மையே காரணம்.

பல நாட்களாக கழிவுநீர், குடிநீருடன் கலந்து வருகிறது. அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அலட்சியம் செய்தார்' என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us