/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாட்டின் இரு முனையை தொட்ட பல் மருத்துவர்
/
நாட்டின் இரு முனையை தொட்ட பல் மருத்துவர்
ADDED : நவ 03, 2025 04:57 AM

ஆனால், ஒரு சில பாக்கியசாலிகளால் மட்டுமே 'கே 2 கே' எனும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்ய முடிகிறது. அப்படிப்பட்ட சிலரில் ஒருவரை பற்றி எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
சைக்கிள் பயணம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் பிரிந்தா சுஹாஷ் கோதி, 51. இவர் மருத்துவராக இருந்தாலும் சமூகத்தின் மீதும், தன் உடல் நலத்தின் மீதும் அதீத அக்கறை கொண்டவர். இவர் தன் உடலை சீராக பராமரிக்க சைக்கிளிங் செய்வதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் மைசூரு நகர ராயல் டைகர் சைக்கிள் குழுவில் உள்ள 11 உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.
இவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளிலே பயணம் செய்ய பயிற்சிகளில் ஈடுபட்டார். இதற்காக, கடந்த எட்டு மாதங்கள் தீவிர பயிற்சியில் மேற்கொண்டார். பயிற்சியில் தன் முயற்சியை காட்டி முழு திறனையும் வெளிப்படுத்தினார். இதன்படி, செப்டம்பர் 22ம் தேதி தன் குழுவினருடன் இணைந்து பயணத்தை துவங்கினார். 'ஒரு நாடு ஒரு பயணம்' எனும் தலைப்பில் பயணம் துவங்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை ஜம்மு காஷ்மீரின் லால் சவுக்கிலிருந்து துவங்கிய பயணம் பஞ்சாப், ஹரியானா, புதுடில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என சென்றது. கிட்டத்தட்ட 22 நாட்களில் வெயில், மழை என அனைத்து காலநிலை மாற்றங்களையும் கடந்து, 3,650 கிலோ மீட்டர் பயணித்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடைந்தார்.
இவர், தனது பயணத்தில் வரும் வழியில் பல மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் பல் சுகாதாரம், தேச பக்தி, ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை கேட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி பெண்ணாக இருந்து கொண்டு பல கிலோ மீட்டரை சைக்கிளில் எப்படி பயணித்தீர்கள் என ஆச்சரியமாக கேட்டு உள்ளனர்.
பொன் வார்த்தை இந்த பயணம் குறித்து, பிரிந்தா கூறியதாவது:
மொத்தம், 22 நாட்கள் சைக்கிள் பயணத்தில், 11 மாநிலங்களில் வாழும் மக்களை சந்தித்தேன். அவர்களது வாழ்வியல், பண்பாடு, கலாசாரம் குறித்து அறிந்து கொண்டேன். இது, எனக்கு புது அனுபவமாக இருந்தது. இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
விதவிதமான உணவுகளை சாப்பிடக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த பயணத்தில் பல சவால்களை சகித்து கொண்டேன். ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை சுமார் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்து விட்டேன்.
பள்ளி மாணவர்களை சந்தித்தேன். அவர்களுடன் தேசபக்தி, ஒற்றுமை, பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அவர்களுடன் நடத்திய உரையாடல்களை மறக்க முடியாது.
அனைவரும் சைக்கிள் ஓட்ட வேண்டும். சைக்கிள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவக்கும். இன்றைய இளைஞர்கள் பலரும் சைக்கிள் ஓட்டுவதில்லை. இதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும். சைக்கிள் ஓட்டி ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

