/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலையில் வாணலியை கவிழ்த்து சென்ற பயணி
/
தலையில் வாணலியை கவிழ்த்து சென்ற பயணி
ADDED : நவ 03, 2025 04:56 AM

ரூபேன அக்ரஹாரா: நவ. 3-: இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பயணி, போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க, வாணலியை தலையில் கவிழ்த்து சென்ற வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க, சிலர் அரை ஹெல்மெட், தரமற்ற ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இதற்கிடையே அபராதத்தில் இருந்து தப்பிக்க, ஒரு பயணி விசித்திரமான வழியை கையாண்டுள்ளார். பெங்களூரின், ரூபேன அக்ரஹாரா அருகில், நேற்று முன்தினம் பைக் சென்றது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர், ஹெல்மெட் அணியவில்லை. மாறாக வாணலியை தலையில் கவிழ்த்து கொண்டு பயணித்தார். இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலை தளங்களில் பரப்பினார். அந்த பயணியை பலரும் கண்டித்துள்ளனர்.

