/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காட்டு பன்றிகள் அட்டகாசம் கோலார் விவசாயிகள் பீதி
/
காட்டு பன்றிகள் அட்டகாசம் கோலார் விவசாயிகள் பீதி
ADDED : நவ 03, 2025 04:55 AM

கோலார்: கோலாரில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் வயல் பகுதிகளில் நடமாட முடியாமல் பலரும் அச்சப்படுகின்றனர்.
கோலாரின் ஜட்டேரி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலையில், வயலில் இருந்து தேவம்மா, 45 என்ற பெண் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி அவர் மீது பாய்ந்து தாக்கியது.
இதனால் பயந்து போன தேவம்மா அலறியுள்ளார். தேவம்மா குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உள்ளனர்.
இதனால் காட்டுப் பன்றி ஓடியது. பலத்த காயம் அடைந்த தேவம்மா, கோலார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோலார் மாவட்ட வனத்துறைக்கு ஜட்டேரி கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.
தங்கவயல் அருகே உலகமதி கிராமத்திலும், கிருஷ்ணாபுரம் தைலமர தோப்பிலும் காட்டுப் பன்றிகள் நடமாடுகின்றன. பங்கார்பேட்டை வனப் பகுதியை ஒட்டியுள்ள பூதி கோட்டை கிராம பகுதிகளிலும் காட்டுப் பன்றிகள் காணப்படுகின்றன. பயிர்களை நாசமாக்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

