ADDED : மே 07, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
பீன்யா: விபத்தை ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநருக்கு 'தர்ம அடி' விழுந்தது.
பெங்களூரு டி.தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சீனிவாஸ் என்பவர், தனது காரில் கடந்த 4ம் தேதி சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, காரின் பின்புறத்தில் மோதியது. லாரி ஓட்டுநர் ரஹ்மான் - சீனிவாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாரியுடன் தப்பிக்க ரஹ்மான் முயன்றார். சீனிவாஸ், தனது காரில் விரட்டினார்.
பீன்யா சந்திப்பு அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியது. ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் காயம் அடைந்தார். அங்கிருந்தோர், லாரி ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து, பீன்யா போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
