தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பணத்தில் மெத்தை செய்து படுத்திருந்த எலியால் பரபரப்பு

 பணத்தில் மெத்தை செய்து படுத்திருந்த எலியால் பரபரப்பு

 பணத்தில் மெத்தை செய்து படுத்திருந்த எலியால் பரபரப்பு


ADDED : ஆக 09, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கன் கடையில் பணத்தை எடுத்த எலி, பிளாஸ்டிக் கவரில் பதுக்கி வைத்திருந்த சுவாரஸ்ய சம்பவம், சிக்கமகளூரில் நடந்துள்ளது.

துமகூரில் சில நாட்களுக்கு முன், தங்க ந கைக்கடையில் 10 லட்சம்ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கா ணாமல் போயின. கடை உரிமையாளர் நகைகளை தேடிய போது, எலி பொந்துக்கு ள் நகைக ள் இரு ந்தன.

அவர் கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, எலியே ஒவ்வொரு நகையாக, வாயால் கவ்வி சென்று, பொந்துக்குள் போட்டது தெரிந்தது. தற்போது அதேபோன்ற ருசிகர சம்பவம் சிக்கமகளூரில் நடந்துள்ளது.

சிக்கமகளூரு மாவட்டம், அப்ஜல்புராநகரில் வசிக்கும் சித்திக் என்பவர், 'ஜம்ஜம் சிக்கன்' என்ற பெயரில், கறிக்கடை நடத்துகிறார். இவர் தினமும் வியாபாரம் முடிந்த பின், கல்லா பெட்டியில் பணத்தை வைத்து கடையை பூட்டி செல்வார். அவ்வப்போது இந்த பணத்தில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் காணாமல் போயின.

சிறிய தொகை என்பதால், முதலில் அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து பணம் மாயமானதால், யாரோ திருடர்கள் கல்லாப்பெட்டியில் கை வைக்கின்றனர் என, சந்தேகித்தார்.

வழக்கம்போன்று, நேற்று காலை கடைக்கு வந்த சித்திக், கல்லா பெட்டியில் பார்த்த போது, சில ரூபாய் நோட்டுகளை காணவில்லை. கீழே விழுந்திருக்குமோ என, நினைத்து ஒவ்வொருஇடமாக ஆராய்ந்து பார்த்த போது, மூலையில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருப்பது தெரிந்தது.

அதை திறந்து பார்த்த போது, ஒரு எலி அமர்ந்திருந்தது. அதில், காணாமல் போன ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை மெத்தை போன்று போட்டு, அதன் மீது எலி அமர்ந்திருப்பதை கண்டு, சித்திக் ஆச்சர்யமடைந்தார்.எலியின் செயலை அப்பகுதியினருக்கும் காட்டினார். இக்காட்சியை சிலர் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us