தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவியை கொன்று சாக்கடையில் வீசிய கணவர் கைது 

 மனைவியை கொன்று சாக்கடையில் வீசிய கணவர் கைது 

 மனைவியை கொன்று சாக்கடையில் வீசிய கணவர் கைது 


ADDED : ஆக 09, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவேக்நகர்: குடும்ப தகராறில் மனைவியை கொன்று, சாக்கடையில் உடலை வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு விவேக்நகர் வண்ணார்பேட்டையில் வசித்தவர் அந்தோணி, 63. இவரது மனைவி கீதா, 48. தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. வாடகை வீட்டில் கணவன், மனைவி மட்டும் வசித்தனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்தோணி வேலைக்கு சரியாக செல்லவில்லை. இதனால் கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 5ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், கீதாவின் கழுத்தை நெரித்து அந்தோணி கொலை செய்தார்.

உடலை வீட்டின் அருகே ஓடும் சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பினார். 6ம் தேதி கீதாவின் உடல் மீட்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அந்தோணியை, விவேக்நகர் போலீசார் தேடிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us