தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாரத்தானில் பங்கேற்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு

 மாரத்தானில் பங்கேற்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு

 மாரத்தானில் பங்கேற்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு


ADDED : ஆக 09, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: நந்தி மமலையில் நடந்த, மழைக்கால மாரத்தான் போட்டியில் பங்கேற்ற தனியார் நிறுவன ஊழியர், மாரடைப்பால் உயிரிழந்தார்.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற நந்தி மலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. 10 கி.மீ., 21 கி.மீ., பிரிவுகளில் போட்டி நடந்தது.

இதில் இளைஞர்கள், இளம் பெண்கள், தடகள வீரர்கள் உட்பட, 4,500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். 21 கி.மீ., பிரிவில் பெங்களூரில் வசித்த அமன் தீப் சிங், 31, பங்கேற்றிருந்தார்.

பாதி தொலைவை எட்டிய நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள், அமன் தீப் சிங்கை உடனடியாக முத்தெனஹள்ளியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி, அவர் உயிரிழந்தார். தீவிர மாரடைப்பால் அவர் இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாபை சேர்ந்த அமன் தீப் சிங், பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மான்யதா டெக்பார்க்கில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் மாரத்தான் ஓட்டத்தை துவக்கும் முன், '21 கி.மீ., மாரத்தான் போட்டியில் பங்கேற்கிறேன். கடவுள் என்னுடன் இருப்பார்' என, 'இன்ஸ்டாகிராமில்' பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us