நாட்டில் கலவரம் ஏற்படுத்த சதி ராய்ச்சூர் டீ கடைகாரர் கைது
நாட்டில் கலவரம் ஏற்படுத்த சதி ராய்ச்சூர் டீ கடைகாரர் கைது
ADDED : ஆக 09, 2026 11:10 PM

ராய்ச்சூர்: ராய்ச்சூர் டவுன் சதர் பஜார் பகுதியில் வசிப்பவர் முகமது ஷாஹில், 24; டீ கடை நடத்துகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிடும், 'ராணா பாய்' என்ற சமூக வலைதள கணக்கை பின் தொடர்ந்தார்.
அந்த சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள், கருத்துகளை 'ரீ போஸ்ட்' செய்து வந்தார். இதனை ராய்ச்சூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கவனித்தனர்.
சதர் பஜார் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று அதிகாலை முகமது ஷாஹில் கைது செய்யப்பட்டார். அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மொபைல் போனை ஆய்வு செய்த போது, 'ராணா பாய்' என்ற நபருடன் 'வாட்ஸாப்' மூலம் தினமும் பேசியது தெரிந்தது.
நமது நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த ராணா பாய் கூறியதன் படி, முகமது ஷாஹில் திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தினால் பெரும் தொகை பணம், கை துப்பாக்கியை அனுப்பி வைப்பதாக ராணா பாய் அனுப்பிய மெசேஜை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சில மெசேஜ்களை, முகமது ஷாஹில் அழித்துள்ளார். அதை மீட்டெடுக்க தடய ஆய்வக மையத்திற்கு அனுப்பியுள்ளனர். முகமது ஷாஹிலிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
