தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயங்கரவாதிகளா என்று கேட்டு ஐ.டி., ஊழியர்கள் மீது தாக்குதல்

 பயங்கரவாதிகளா என்று கேட்டு ஐ.டி., ஊழியர்கள் மீது தாக்குதல்

 பயங்கரவாதிகளா என்று கேட்டு ஐ.டி., ஊழியர்கள் மீது தாக்குதல்


ADDED : ஆக 09, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எச்.ஏ.எல்: பயங்கரவாதிகளா என்று கேட்டு, ஐ.டி., ஊழியர்கள் இருவரை. 'பேஸ்பால்' பேட்டால் தாக்கியவரை போலீஸ் தேடுகிறது.

பெங்களூரு எச்.ஏ.எல்., ஏ.இ.சி.எஸ்., லே - அவுட்டில் வசிப்பவர்கள் சந்தீப் குமார், ரோகித் குமார். நண்பர்களான இருவரும் ஐ.டி., ஊழியர்கள்.

கடந்த 6ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, இன்னொரு நண்பருக்காக சாலையில் காத்து நின்றனர்.

அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், சந்தீப், ரோகித்திடம் சென்று, 'நீங்கள் இருவரும் பயங்கரவாதிகளா' என்று கேள்வி எழுப்பினார்.

இருவரும், 'இல்லை' என்று பதில் அளித்தனர். 'அப்படி என்றால் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்' என்று அந்த நபர் கேட்டுள்ளார்.

கோபம் அடைந்த சந்தீப், ரோகித், 'எங்களை பற்றி விசாரிக்க நீங்கள் யார்' என்று கேட்டனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த நபர் காரில் இருந்து பேஸ்பால் பேட்டை எடுத்து வந்து, நண்பர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

காயம் அடைந்த நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில், சந்தீப் நேற்று புகார் செய்தார். மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரை கைது செய்ய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us