/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வருடன் மடாதிபதிகள் சந்திப்பு
/
முதல்வருடன் மடாதிபதிகள் சந்திப்பு
ADDED : மே 04, 2025 12:25 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மடாதிபதிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.
காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமூகங்களின் மடாதிபதிகள் நிரஞ்சானந்தபுரி, ஹிம்மாடி சித்தராமேஸ்வரா, மாதர சன்னய்யசா, சாந்தவீர, பிரசானந்தா உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர். அரைமணி நேரத்திற்கு மேலாக நடந்தது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு சொந்தமான கோவில்களில் புத்தர், பசவ, அம்பேத்கர், வால்மீகி, நாராயணகுரு கருத்துகளை அறிமுகப்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கவும், போட்டி தேர்வுக்கு தயாராக, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கட்டப்பட உள்ள குருகுலத்திற்கு அரசு நிதி ஒதுக்கவும் மானியம் வழங்கும்படியும் கோரிக்கை வைத்தனர்.

