/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாட்டு எலும்புகள் குவிப்பு: 6 பேர் மீது போலீசில் புகார்
/
மாட்டு எலும்புகள் குவிப்பு: 6 பேர் மீது போலீசில் புகார்
மாட்டு எலும்புகள் குவிப்பு: 6 பேர் மீது போலீசில் புகார்
மாட்டு எலும்புகள் குவிப்பு: 6 பேர் மீது போலீசில் புகார்
ADDED : செப் 14, 2025 04:37 AM
கார்வார்: குடியிருப்புப் பகுதியில் மாடு எலும்புகள் குவிந்து கிடந்த வழக்கில், ஆறு பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
உத்தர கன்னடாவின் பட்கல் மக்தம் காலனியில் காலி நிலத்தில் மாடு எலும்புகள் குவிந்து கிடந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக மக்தம் காலனியின் தாஹிர் மஸ்தான் அளித்த புகாரில், 'எங்கள் காலனியில் 10ம் தேதி சீனிவாஸ், ஸ்ரீகாந்த் உட்பட ஆறு பேர் சுற்றித்திரிந்தனர். அவர்கள் சாக்குப்பையில் கொண்டு வந்த மாடு எலும்புகளை கொட்டிச் சென்றனர். ஆனால் எங்கள் சமூகம் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இரு சமூகங்கள் இடையே பிரச்னை ஏற்படுத்த முயற்சிக்கும், ஆறு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.