ஹெச்.எம்.டி., பெயரில் போலி வாட்ச் விற்பவர்கள் மீது நடவடிக்கை
ஹெச்.எம்.டி., பெயரில் போலி வாட்ச் விற்பவர்கள் மீது நடவடிக்கை
UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 09:26 PM

பெங்களூரு: ‘‘ஆன்லைனில் போலி ஹெச்.எம்.டி., வாட்ச் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, ஹெச்.எம்.டி., வாட்ச் நிறுவன நிர்வாக இயக்குநர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹெச்.எம்.டி., நிறுவனத்தின் பெயரில் போலி வாட்ச்கள் சமீப காலமாக, ஆன்லைனில் விற்கப்படுவது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்து விசாரிக்க முடிவெடுத்தேன். ‘பிளிப்கார்ட்’ இணையதளத்தில் 290 ரூபாய்க்கு ஹெச்.எம்.டி., பெயரில் விற்கப்பட்ட போலி வாட்ச்சை ஆர்டர் செய்தேன். அந்த வாட்ச் எனது கைக்கு வந்தது.
அந்த வாட்ச் தரமற்றது; போலியானது என்பதை அறிந்தேன். இது குறித்து, பிளிப்கார்ட், போலி வாட்ச் விற்ற நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இது போன்று, போலி ஹெச்.எம்.டி., வாட்சுகள் விற்கும் கடை உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இவ்விஷயம் குறித்து, பெங்களூரு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆன்லைனில் விற்கும் போலியான, தரமற்ற வாட்ச்களை யாரும் வாங்க வேண்டாம்; ஹெச்.எம்.டி., நிறுவனத்திற்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டாம். ஆன்லைனில் போலி வாட்ச் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக போலி வாட்ச்களை வாங்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
