தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கையர் மீது நடவடிக்கை

 மக்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கையர் மீது நடவடிக்கை

 மக்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கையர் மீது நடவடிக்கை


ADDED : செப் 26, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பொதுமக்களை மிரட்டி, பணம் பறிக்கும் திருநங்கையர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெங்களூரு நகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு நகர போலீசார் வெளியிட்ட அறிக்கை:

பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பது என பல்வேறு புகார்கள், திருநங்கையர் மீது வந்தன. இந்த புகார்களின் உண்மை தன்மையை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

'டிராபிக் சிக்னல்'கள், சந்தை, பஸ், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில், மக்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கையர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கையர் தொடர்பான அதிக புகார்கள் வந்த இடங்களை கண்டறிந்து, அத்தகைய இடங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்கும்படி ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவர்களை, மரியாதை குறைவான சொற்களால் போலீசார் அழைக்கக்கூடாது. இதை அனைத்து போலீசாரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அதேசமயம், திருநங்கையரின் சட்டப்பூர்வ உரிமைகள், கண்ணியம், மரியாதை போன்றவை குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும். திருநங்கையர், பொதுமக்களை மிரட்டினால் 112 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us