/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அர்ச்சகர்களின் சம்பள பாகுபாடு நீக்க நடவடிக்கை: ராமலிங்கரெட்டி
/
அர்ச்சகர்களின் சம்பள பாகுபாடு நீக்க நடவடிக்கை: ராமலிங்கரெட்டி
அர்ச்சகர்களின் சம்பள பாகுபாடு நீக்க நடவடிக்கை: ராமலிங்கரெட்டி
அர்ச்சகர்களின் சம்பள பாகுபாடு நீக்க நடவடிக்கை: ராமலிங்கரெட்டி
ADDED : ஜூலை 19, 2025 11:20 PM

பெங்களூரு: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் சம்பள பாகுபாட்டை நீக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி அளித்துள்ளார்.
ஆகம தேர்வில் தேர்ச்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை, கர்நாடக மாநில ஆகம கல்வி மற்றும் தேர்வு குழு, பெங்களூரில் நேற்று ஏற்பாடு செய்திருந்தன.
அர்ச்சகர்களுக்கு சான்றிதழ் வழங்கி, மாநில அறநிலையத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பேசியதாவது:
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் பணியாற்றும் அர்ச்சர்களின் சம்பள பாகுபாடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அர்ச்சகர்களின் சம்பள பாகுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தஷ்திக் தொகையை அர்ச்சகர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக அறநிலையத்துறையில் தங்கள் பெயர்களை அர்ச்சகர்கள் பதிவு செய்ய வேண்டும்.
மாநிலத்தில் 205 'ஏ' கிரேடு, 195 'பி' கிரேடு, 34,127 'சி' கிரேடு கோவில்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஏ, பி கிரேடு கோவில்கள் அதிக வருமானம் ஈட்டினாலும், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள், கெங்கேரி விஸ்வ ஒக்கலிகர் சன்ஸ்தான் மடத்தின் நிச்சலானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர்.