தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சிறையில் நலம் விசாரித்த நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா

சிறையில் நலம் விசாரித்த நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா

சிறையில் நலம் விசாரித்த நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை, காணொளி மூலம் நேற்று நடந்தபோது, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா நலம் விசாரித்து கொண்டனர்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை, நேற்று 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வந்தது. நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடி காணொளி மூலம் ஆஜராகினர்.

விசாரணை துவங்கும் முன், நீண்ட நாட்களுக்கு பின் தர்ஷனும், பவித்ரா கவுடாவும் பார்த்து கொண்டனர்.

அப்போது, இருவரும் பேசியதாவது:

பவித்ரா கவுடா: நலமாக இருக்கிறீர்களா? மதிய உணவு சாப்பிட்டீர்களா? முதுகுவலி எப்படி உள்ளது? எத்தனை நாட்களுக்கு பிசியோதெரப்பி எடுத்து கொள்ள வேண்டும்?

தர்ஷன்: என் முதுகு உடைந்தது போல உணர்கிறேன். பிசியோதெரபி எடுத்து வருகிறேன். இன்னும் சிகிச்சை பெற வேண்டும்.

பவித்ரா கவுடா: இன்னும் எத்தனை நாட்கள் நான் சிறையில் இருக்க வேண்டும்?

தர்ஷன், தனது கையில் நான்கு விரல்களை காண்பித்தார்.

இதை பார்த்த பவித்ரா கண்ணீருடன், என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நரக வேதனையாக உள்ளது.

தர்ஷன்: பல மாதங்களாக இங்கு உள்ளாய். இன்னும் நான்கைந்து மாதங்கள் பொறுத்து கொள். அதுவரை மன உறுதியுடன், திடமாகவும் இரு என தைரியம் மூட்டினார்.

பின், காணொளி இணைப்பு கிடைத்ததும், இருவரும் மவுனமாகியதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு தரப்பு சாட்சியான புனித்திடம், அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது புனித், ‘‘நீதிபதி முன் நான் என்ன வாக்குமூலம் அளித்தேன் என்பது எனக்கு ஞாபகமில்லை; தெரியவும் இல்லை. பயத்தால் அந்த வாக்குமூலம் அளித்தேன்,’’ என்றார்.

அதிர்ச்சியடைந்த வக்கீல், நீதிபதி முன் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை குறிப்பிட்டு, கேட்டபோது, ‘இல்லை’ என்று கூறிய புனித், ‘‘குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதை தொலைகாட்சியில் பார்த்ததாகவும், தொலைகாட்சியில் பார்த்ததை மட்டுமே கூறினேன்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us