தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கட்சி விஷயங்களை பிறர் பேசக்கூடாது காங்., தலைவர் ஹரிபிரசாத் கண்டிப்பு

கட்சி விஷயங்களை பிறர் பேசக்கூடாது காங்., தலைவர் ஹரிபிரசாத் கண்டிப்பு

கட்சி விஷயங்களை பிறர் பேசக்கூடாது காங்., தலைவர் ஹரிபிரசாத் கண்டிப்பு


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி நானும், முதல்வரும் மட்டுமே பேச வேண்டும். வேறு யாரும் பேசக்கூடாது, என, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜண்ணா, கட்சியை விட்டு செல்ல மாட்டார்.

அவரை கட்சியிலேயே தக்க வைத்து கொள்ள முயற்சிப்போம். அவர் பகிரங்கமாக பேசுவது அதிகரிக்கிறது. ஆனால், அவர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார். இது குறித்து, நானும், முதல்வரும் பேசுவோம்.

கட்சியின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி, நானும், முதல்வரும் மட்டுமே பேசி சரி செய்ய வேண்டும். வேறு அமைச்சர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும், பா.ஜ.,வுக்கு எதிராக பேச வேண்டும்.

கட்சியில் அனைத்து விதமான கருத்துகள் கொண்டவர்களும் உள்ளனர். இடதுசாரிகள், சமூக சிந்தனை உள்ளவர்கள், மதவாத மனப்போக்கு உள்ளவர்களும் இருக்கலாம். சிலரின் கருத்துகளை வைத்து, காங்கிரசே மதவாத கட்சி என, கூற முடியாது. பா.ஜ.,வை போல, காங்கிரஸ் மதவாத கட்சியல்ல.

ஜாதி, மதம் அடிப்படையில் காங்கிரஸ் பாரபட்சம் பார்ப்பது இல்லை. அனைவரும் தங்கள் கருத்துகளை கூறலாம். அனைவரின் பேச்சுகளையும் கேட்கும். இறுதி முடிவை கட்சியே எடுக்கும். மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

ஹிரியூரு இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதமாவதற்கு, அரசு காரணம் அல்ல. இடைத்தேர்தல் தேதியை காங்கிரசோ அல்லது மாநில அரசோ அறிவிக்க முடியாது. தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us