UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:54 PM
தங்கவயல்: தங்கவயலை தாலுகாவாக அரசு அறிவித்து, ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும், இன்னும் இங்குள்ள அரசு பொது மருத்துவமனை, இன்னமும் தாலுகா தகுதியை பெறவில்லை.
தங்கவயல் அரசு பொது மருத்துவமனை, கோலார் மாவட்ட சப் – டிவிஷன் மருத்துவமனையாகவே இருக்கிறது.
இந்த பொது மருத்துவ மனை, தங்கவயலின் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் மட்டுமின்றி, 160 கிராமங்களின் குடும்பங்களுக்கும் சிகிச்சை தரும் மருத்துவமனையாக உள்ளது.
இங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் 127. ஆனால், இங்கு பணியில் உள்ள ஊழியர்கள் 51. காலியாக உள்ள இடங்கள் 76.
இது தவிர, தங்கவயலில் மிகவும் அவசிய தேவையாக இருப்பது இதய நோய்க்கான சிகிச்சை பிரிவு. தங்கவயலில் அடிக்கடி மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை தடுக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம்.
குறிப்பாக, தங்கவயலை தாலுகாவாக அரசு அறிவித்து, ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
எனினும், இன்னும் இங்குள்ள அரசு பொது மருத்துவமனை, இன்னமும் தாலுகா தகுதியை பெறவில்லை.
அதையும் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.
