தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கு அரசு பதவி சித்ரதுர்கா மாவட்ட காங்கிரசார் எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கு அரசு பதவி சித்ரதுர்கா மாவட்ட காங்கிரசார் எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கு அரசு பதவி சித்ரதுர்கா மாவட்ட காங்கிரசார் எதிர்ப்பு


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கு அரசு பதவி வழங்கியதற்கு, சித்ரதுர்கா மாவட்ட காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக கழகம், தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கழகம், அம்பேத்கர் வளர்ச்சி கழகம், ஹட்டி தங்க சுரங்க நிறுவனம் உட்பட பல கழகங்கள் மற்றும் வாரியங்களின் இயக்குநர்கள், உறுப்பினர்களாக 428 பேரை நியமித்து நேற்று முன்தினம் அரசு உத்தரவிட்டது.

இதில், பட்டு தொழில் வளர்ச்சி ஆணைய இயக்குநராக சித்ரதுர்காவின் லீலாதர் தாக்குர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சித்ரதுர்கா மாவட்ட காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லீலாதர் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஆவார். அவருக்கு என்ன அடிப்படையில் அரசு பதவி வழங்கப்பட்டது; கட்சிக்காக பல ஆண்டுகள் உழைப்பவர்களை புறக்கணித்து ஆர்.எஸ்.எஸ்., பின்புலம் கொண்டவருக்கு ஏன் அரசு பதவி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். லீலாதர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த முறை, வாரிய தலைவர்கள் பதவியை நிரப்பிய போது, ஷிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் புகாந்திற்கு அரசு பதவி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது நியமன உத்தரவை, அரசு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us