தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மெட்ரோ ரயில் செலவு விவகாரம் சிவகுமார் கருத்துக்கு தேஜஸ்வி எதிர்ப்பு

மெட்ரோ ரயில் செலவு விவகாரம் சிவகுமார் கருத்துக்கு தேஜஸ்வி எதிர்ப்பு

மெட்ரோ ரயில் செலவு விவகாரம் சிவகுமார் கருத்துக்கு தேஜஸ்வி எதிர்ப்பு


ADDED : நவ 13, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘பிங்க்’ மெட்ரோ ரயில் பணிகளில், 84 சதவீதம் மாநில அரசு செலவு செய்ததாக முதல்வர் சிவகுமாரின் கருத்துக்கு, பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையே மெட்ரோ ரயில் சேவையை, இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதற்காக, டில்லியில் இருந்து விமானத்தில் வரும் அவர், பெங்களூரு வந்ததும், சாலை மார்க்கமாக ஜிகனியில் உள்ள பிரஷாந்தி கூடீரம் வளாகத்திற்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் பொன் விழாவில் பங்கேற்கிறார். இதனால், நகரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பிங்க்’ வழித்தட மெட்ரோ ரயில் பணிக்கான செலவுகளில், 84 சதவீதம் மாநில அரசு செய்ததாக முதல்வர் சிவகுமார் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பெங்., தெற்கு தொகுதி பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இந்த நிறுவனத்தில் மத்திய அரசு 50 சதவீதம்; மாநில அரசு 50 சதவீதம் பங்குகளை கொண்டுள்ளது. ‘பிங்க்’ மெட்ரோ ரயில் பணி செலவில் 65,291 கோடி ரூபாய் மாநில அரசு செலவு செய்ததாக, 12,291

கோடி ரூபாய் மாநில அரசு செலவு செய்ததாக சிவகுமார் தவறான கருத்தை தெரிவித்தார். 65 ஆயிரம் கோடி என்பது மத்திய அரசின் பணம். இதை, மாநில அரசு தனது பணம் என சொல்வது அர்த்த மற்றது.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக உலக வங்கியிலிருந்து, மத்திய அரசே பணத்தை கடனாக வாங்குகிறது. இந்த கடன் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை. மத்திய அரசுக்கே வழங்கப்பட்டது. இதை சிவகுமார் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோல, பெங்களூரு ஐ.ஐ.எம்.பி., அரங்கத்தில் இன்று நடக்கவுள்ள பிரதமர் மோடி பங்கேற்கும் மெட்ரோ ரயில் சேவை துவக்க நிகழ்ச்சியில், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ண பைரே கவுடா கூறியதாவது:

கர்நாடகாவிற்காக நீதி கேட்டதால், நான் பேச, தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் நான் பேச வாய்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இரவு வெளியான நிகழ்ச்சி நிரலில் நான் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் செலவில் மாநில அரசே பெரும் பகுதியை ஏற்கிறது. மாநிலத்திற்காகவும், பெங்களூரின் வளர்ச்சிக்காகவும் தீவிரமாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us