/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிறந்த நாளன்று இறந்த நடிகர் உடல் உறுப்புகள் தானம்
/
பிறந்த நாளன்று இறந்த நடிகர் உடல் உறுப்புகள் தானம்
ADDED : அக் 25, 2025 11:04 PM

பெங்களூரு: விபத்தில் காயமடைந்த சின்னத்திரை நடிகர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளன்றே உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவை சேர்ந்தவர் ஆர்யன், 22. இவர் சின்னத்திரை நடிகர். சில தொடர்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஹாசன் அருகில் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் உயிரிழந்தார். அன்று அவரது பிறந்த நாள்.
பெற்றோரும், நண்பர்களும் மனம் நொந்துள்ளனர். மருத்துவமனைக்கு கேக் கொண்டு வந்தனர். அவரது உடல் அருகில் வைத்து, அவரது கையை பிடித்து கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

