/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச படங்களை பரப்புவோருக்கு நடிகை சப்தமி கவுடா கண்டனம்
/
ஆபாச படங்களை பரப்புவோருக்கு நடிகை சப்தமி கவுடா கண்டனம்
ஆபாச படங்களை பரப்புவோருக்கு நடிகை சப்தமி கவுடா கண்டனம்
ஆபாச படங்களை பரப்புவோருக்கு நடிகை சப்தமி கவுடா கண்டனம்
ADDED : மார் 04, 2026 05:56 AM

பெங்களூரு: பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகையரை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவோருக்கு, நடிகை சப்தமி கவுடா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் நடிகையர் பங்கேற்கும் போது, அவர்கள் அணியும் உடைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் ஆபாச கமென்ட்டுகள் பதிவிடப்படுகின்றன. நடிகையரை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதற்கு, ' காந்தாரா ' பட புகழ் நடிகை சப்தமி கவுடா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவு:
திரைப்பட துறையில் பணியாற்றும் பெண்கள், தொடர்ச்சியாக பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். நடிகையர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது சிலர் ஆபாசமாக புகைப்படம், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
எங்கள் கலையை விட எங்கள் உடல்களை பெரிதாக்குவது மீண்டும், மீண்டும் நிகழ்கிறது. இதுபோன்ற நடத்தை வெட்கக்கேடானது, ஏற்று கொள்ளவும் முடியாதது. நாங்கள் எங்கள் கலைக்காக சினிமாவில் நடிக்கிறோம். எங்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுப்பது, எங்கள் கண்ணியத்தின் மீதான தாக்குதல். எங்களுக்கும் அடிப்படை மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற அனுபவத்தை சந்தித்த பெண்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். மரியாதை கோரும் எங்கள் குரல் தொடரும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவை நடிகைகள் பிருந்தா ஆச்சார்யா, ஆஷிகா ரங்கநாத், ரிதன்யா விஜய் ஆகியோர் மறு பதிவிட்டு உள்ளனர்.

