sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்

/

 கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்

 கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்

 கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்


ADDED : மார் 04, 2026 05:54 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் கோடை காலத்தின் போது, தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து எடுக்குமாறு நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மறுசீராய்வு கூட்டம் நடந்தது.இதில், குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், நகர்ப்புற மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.

துஷார் கிரிநாத் பேசியதாவது:

பெங்களூரில் கோடை காலத்தின் போது, தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளிலும், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பாடமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரின் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. புதிய நீர் இணைப்புகளை வழங்கும் செயல்முறை விரைந்து முடிக்க வேண்டும். கோடை வருவதற்கு முன்பே அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களில் பழுதுபார்க்கும் பணி விரைவில் நடைபெற வேண்டும். தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ள, 65 வார்டுகளில் தனித்தனி பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us