/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மிஷன் மங்கள்' திரைப்படத்தால் விண்வெளி மீது ஆர்வம் ஏழாம் வகுப்பு மாணவி தகவல்
/
'மிஷன் மங்கள்' திரைப்படத்தால் விண்வெளி மீது ஆர்வம் ஏழாம் வகுப்பு மாணவி தகவல்
'மிஷன் மங்கள்' திரைப்படத்தால் விண்வெளி மீது ஆர்வம் ஏழாம் வகுப்பு மாணவி தகவல்
'மிஷன் மங்கள்' திரைப்படத்தால் விண்வெளி மீது ஆர்வம் ஏழாம் வகுப்பு மாணவி தகவல்
ADDED : மார் 04, 2026 05:48 AM

பெங்களூரு: 'மிஷன் மங்கள்' திரைப்படத்தை பார்த்த பின், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, ஜவஹர்லால் நேரு கோளரங்கத்திற்கு பள்ளி மாணவி வந்தார்.
இந்தாண்டு சந்திர கிரகணம் நேற்று மாலை, 3:20 முதல் மாலை 6:47 மணி வரை நிகழ்ந்தது. இதனால், மாநிலத்தில் பல கோவில்கள் கிரகணம் துவங்குவதற்கு முன் மூடப்பட்டன. கிரகணம் முடிந்ததும், கோவில் முழுதும் சுத்தம் செய்யப்பட்டு திறக்கப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கிரகணம் முடிந்ததும், பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனமும் செய்தனர். ஆனால், நேற்று பவுர்ணமியும் இருந்ததால், சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுாரில் உள்ள மலை மகாதேஸ்வரா கோவில், வழக்கம் போல திறந்திருந்தது.
பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். ஷிவமொக்காவில் ஸ்ரீ துர்கம்மா, ஸ்ரீ மாரியம்மா தேவி திருவிழாவை ஒட்டி நடந்த தேர் ஊர்வலம், கிரகணம் துவங்குவதற்கு முன்னரே முடிக்கப்பட்டது.
அம்மன் உற்சவ விக்ரகங்கள் கோவில்களுக்குள் கொண்டு செல்லப்பட்ட பின், கோவில் மூடப்பட்டது. பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் நேற்று சந்திர கிரகணத்தை பார்க்கவும், இங்குள்ள சி.வி.விஸ்வேஸ்வரய்யா அரங்கில் விளக்க கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்குள்ள பெரிய திரையில், எவ்வாறு சந்திர கிரகணம் ஏற்படுகிறது, எந்தெந்த நாடுகளில் இது தென்படும் என்பது விளக்கப்பட்டது.
விண்வெளி தொடர்பான மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு, கோளரங்கத்தின் இயக்குனர் குருபிரசாத் விளக்கினார். பின், மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பான புத்தகம் வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட ராஜராஜேஸ்வரி நகர் ஸ்ரீ ஞானாக் ஷி வித்யா நிகேதன் பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் கெங்கேரியை சேர்ந்த அதிதி கூறுகையில், ''மிஷன் மங்கள்' என்ற படத்தை பார்த்த போது, சூரியன் சூரியன், நட்சத்திரங்கள், சந்திரனை பார்க்க வேண்டும்; அதுபற்றி தெரிந்து கொள்ள மிகவும் விரும்பினேன். இதுபோன்ற சந்திர கிரகணம் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அத்தகைய கருவிகள் என்னிடம் இல்லை. அதனால், கோளரங்கத்திற்கு வந்தேன்,'' என்றார்.

