/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூடுதல் எஸ்.ஐ., மரணம் இரு கண்களும் தானம்
/
கூடுதல் எஸ்.ஐ., மரணம் இரு கண்களும் தானம்
ADDED : நவ 17, 2025 02:33 AM

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் மாரடைப்பால் இறந்த கூடுதல் எஸ்.ஐ.,யின் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டது.
ஹூப்பள்ளி மாவட்டம் கல்கடகி போலீஸ் நிலையத்தில் கூடுதல் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சந்திரகாந்த் ஹுடகி, 58. இவருக்கு நேற்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சந்திரகாந்த் உயிரிழந்தார்.
இவர், உயிரோடு இருக்கும் காலத்தில் கண் தானம் செய்ய பதிவு செய்திருந்தார். இதனால், இவரது இரு கண்களும் தானமாக எடுத்து கொள்ளப்பட்டன. தன் வாழ்கை முடிவடைந்த போதும், மற்றொருவர் வாழ்க்கைக்கு ஒளியை ஏற்படுத்தக்கூடிய வகையில் கண் தானம் செய்த கூடுதல் எஸ்.ஐ., சந்திரகாந்தை அரசு அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டினர்.
இவர் தனது 32 ஆண்டு கால போலீஸ் சர்வீசில் பல நல்ல விஷயங்களை செய்து உள்ளார். அதுமட்டுமின்றி அடிப்படையில் நாடக கலைஞரான இவர், போலீசார் பயன்படுத்தும் லத்தியிலே துளைகளிட்டு புல்லாங்குழல் செய்து, அதிலே இசையை உருவாக்கும் வல்லமை படைத்திருந்தார்.

