/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகா தயாரிக்கும் ஏ.ஐ., லேப்டாப்கள்
/
கர்நாடகா தயாரிக்கும் ஏ.ஐ., லேப்டாப்கள்
ADDED : நவ 18, 2025 04:52 AM

பெங்களூரு: ஏ.ஐ., திறன் கொண்ட மலிவு விலை லேப்டாப்களை கர்நாடக அரசு தயாரித்துள்ளது.
இதுகுறித்து, மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:
பெங்களூரு திறன் உச்சி மாநாடு இன்று துவங்குகிறது. இதில், 60 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 50,000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பர். இம்மாநாட்டில் தகவல், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப், ஸ்பேஸ்டெக் போன்றவற்றில் மூன்று முக்கிய கொள்கைகள் அறிவிக்கப்படும்.
கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை, கர்நாடக மாநில மின்னணு மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஏ.ஐ., திறன் கொண்ட லேப்டாப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது இந்த மாநாட்டில் வெளியிடப்படும். இந்த லேப்டாப்பை அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தலாம். இவை சந்தையில் விற்கப்படும் லேப்டாப்களுடன் ஒப்பிடுகையில், விலை குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

