/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனாம்பா உத்சவத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
/
ஹாசனாம்பா உத்சவத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ADDED : ஆக 27, 2025 11:00 PM
ஹாசன் : பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா உற்சவம் அக்டோபர் 9ம் தேதி முதல் 23 வரை நடக்கவுள்ளது. இதற்காக இப்போதிருந்தே முன்னேற்பாடு நடக்கிறது. இம்முறை உற்சவத்துக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் தயாராகிறது.
ஹாசன் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
ஹாசனின் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. வரும் அக்டோபர் 9ம் தேதி முதல், 23 வரை ஹாசனாம்பா உற்சவம் நடக்கவுள்ளது. இப்போதே ஏற்பாடுகளை துவக்கியுள்ளோம். வழக்கம் போன்று இம்முறையும், லட்சக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய வருவர்.
எவ்வளவு கவனமாக இருந்தாலும், சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே இம்முறை இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்து கொள்வோம். இம்முறை ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏ.ஐ., தொழில்நுட்பம் சாலை நெருக்கடியை கவனித்து, பக்தர்களுக்கு மாற்று பாதைகளை சுட்டிக்காட்டும். கோவில் வளாகத்துக்குள் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் தரிசன நேரத்தை கணக்கிட்டு, நேரம் நிர்வகிப்பில் உதவும்.
ஏ.ஐ., தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இவைகள் கோவிலில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை, குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க உதவும். இதற்காக கோவில் வளாகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

