/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏர்போர்ட் இணையதளத்தில் கன்னட மொழியிலும் சேவை
/
ஏர்போர்ட் இணையதளத்தில் கன்னட மொழியிலும் சேவை
ADDED : ஏப் 02, 2025 06:32 AM
பெங்களூரு, : பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இணையதளத்தில், கன்னட மொழியிலும் சேவை கிடைக்கிறது.
விமான நிலைய நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான ஹரிமாரர் கூறியதாவது:
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இணையதளம் கன்னடத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தை விரிவாகவும், எளிமையாகவும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும், அவர்கள் விரும்பும் மொழியில் பெறலாம்.
இந்த இணையத்தில் விமானங்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் வழங்கப்படுகின்றன. விமானங்கள் புறப்பாடு, வருகை, தாமதம் என அனைத்து தகவல்களும் குறிப்பிட்டிருக்கும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பொதுவான கேள்விகளுக்கு கன்னட மொழியிலேயே பதில் அளிக்கப்படும்.
கர்நாடகாவின் கலாசாரம், நெறிமுறையை பிரதிபலிக்கும் வகையில், விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

