குறைந்த விலைக்கு 'டிவி' தர மறுத்ததால் ஷோரூம் ஊழியர்களை தாக்கிய குடிகாரர்கள்
குறைந்த விலைக்கு 'டிவி' தர மறுத்ததால் ஷோரூம் ஊழியர்களை தாக்கிய குடிகாரர்கள்
ADDED : செப் 22, 2026 01:47 AM
கே: பெங்களூரு, கே.ஆர்.புரத்தின் பட்டரஹள்ளி சிக்னல் அருகில், 'யுனிலைட் ஷோரூம்' என்ற பெயரில் டிவி விற்பனையகம் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், சில நபர்கள் குடிபோதையில், அந்த ஷோரூமுக்கு வந்தனர். 'டிவி' வாங்க வேண்டும் என்றனர். அங்கிருந்த மிகவும் விலை உயர்ந்த 'டிவி'யை பார்த்து, அதை மிகவும் குறைந்த விலைக்கு அளிக்கும்படி தகராறு செய்தனர்.
குறைந்த விலைக்கு 'டிவி' தர மறுத்ததால், கோபமடைந்த குடிகாரர்கள், நேற்று முன் தினம் அதிகாலை முதலே, ஷோரூம் முன் அமர்ந்து மது அருந்தி, தொல்லை கொடுத்தனர். இரவு 7:00 மணிக்கு, திடீரென ஷோரூமுக்குள் புகுந்து, 'எங்களுக்கு 'டிவி' தர முடியாதா' என, கேட்டு ஊழியர்களை தாக்கினர். தடுக்க வந்த, பெண் ஊழியரையும் படிகளில் இருந்து, கீழே தள்ளினர்.
சாலையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து, ஷோரூம் முன் பகுதி கண்ணாடிகளை உடைக்க. அந்நபர்கள் முயற்சித்தனர். அப்பகுதியினர் இந்த காட்சியை, தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதை கவனித்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்கு பதிவு செய்து, அந்நபர்களை தேடி வருகின்றனர்.
