தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'எல்லா மதமும் என் மதமே' அமைச்சர் பசவராஜ் விளக்கம்

 'எல்லா மதமும் என் மதமே' அமைச்சர் பசவராஜ் விளக்கம்

 'எல்லா மதமும் என் மதமே' அமைச்சர் பசவராஜ் விளக்கம்


ADDED : செப் 01, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அனைத்து மதங்களும் சிறந்தவையே. எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை,'' என அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, 'மற்ற மதங்களை விட இஸ்லாம் சிறந்தது' என சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்; அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் சிவகுமார் விளக்கம் அளிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பசவராஜ் ராய ரெட்டி நேற்று கொப்பால் மாவட்டம், எலபுர்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார். பின், அவர் அளித்த பேட்டி :

அனைத்து மதங்களும் சிறந்தவையே. எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை. நான் அனைத்து மதங்களையும் வழிபடுகிறேன். எனக்கு மெக்காவுக்கு புனித பயணம் செல்ல ஆசை. அங்கு செல்வதற்கு மதம் மாற வேண்டும். ஆனால், நான் எக்காரணம் கொண்டும் மதம் மாற மாட்டேன்.

ஏராளமான சிவன், அம்மன் கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்கிறேன். புதிதாக ஒரு மதத்தை உருவாக்கக்கூடாது என யோசிக்கிறேன். யார் எந்த மதத்தை பின்பற்றினாலும், எனக்கு ஆட்சேபனை இல்லை.

ஹிந்து மதம் கெட்டது என கூறவில்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஹிந்து மதத்தை நிறுவியது யார் என யாராவது கூற முடியுமா. இது தொடர்பாக ஹிந்து அமைப்பினர் என்னுடன் விவாதிப்பரா?

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us