ADDED : செப் 01, 2026 03:12 AM
அ நிறம் | அளவு
மங்களூரு: கடலோர பகுதியான மங்களூரில் செப்டம்பர் 18ம் தேதியன்று கர்நாடக அரசின் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடலோர பகுதியான தட்சிண கன்னடா மாவட்டத்தின் மங்களூரில் அமைச்சரவை கூட்டம் நடத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 18ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் கடலோர மாவட்டங்களின் மேம்பாட்டு பணிகள் உட்பட இம்மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அனைத்து துறைகளின் செயலர்கள், முதன்மை செயலர்கள், கடலோர மாவட்டங்கள் தொடர்பான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை தயார் செய்து கொள்ள வேண்டும். மங்களூரில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
